Home Archive by category

பயங்கரவாத தடுப்புச்சட்டம் தொடர்பில் நீதியமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை முற்றாக நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் விவகாரங்கள் அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை முற்றாக மீளாய்வு செய்து அறிக்கை ஒன்றை வழங்குவதற்காக குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் உறுப்பினர்கள் தற்போது நாட்டில் நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பல்வேறு தரப்புடன் இணைந்தும் தனியாகவும் ஆய்வு செய்ய உள்ளனர்.

இதனையடுத்து வழங்கப்படும் அறிக்கைக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதனை தவிர பயங்கரவாதத்தை தடுக்க புதிய சட்ட ஏற்பாடுகளை உருவாக்குவது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

சர்வதேச நாடுகளும் மிகப் பெரிய சவாலாக இருக்கும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த பலமாக சட்டங்கள் தேவைப்படுகின்றன.இதனால், அது குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது எனவும் விஜேதாச ராஜபக்ச கூறியுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை மற்றும் சர்வதேச நாடுகளின் கோரிக்கைகளுக்கு அமைய பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை முற்றாக நீக்குவதாக அரசாங்கம் கூறினாலும் அதனை விட கடுமையாக ஏற்பாடுகளை கொண்ட சட்டத்தை கொண்டு வரலாம் என மனித உரிமைகள் தொடர்பான செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கப்படும் போராட்டங்கள், தொழிற்சங்க நடவடிக்கைகளை தடுக்க எதிர்காலத்தில் இந்த சட்டங்களை பயன்படுத்தலாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இலங்கையில் நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடுப்புச்சட்டம் இரத்துச் செய்யப்பட வேண்டும் என உலக நாடுகள்,சர்வதேச அமைப்புகள் யோசனைகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளன. 

Related Posts