Home Archive by category

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் இன்று காலையில் உயிரிழந்தார்

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி தனது 106வது வயதில் இன்று அதிகாலையில் காலமானார்.

இமாசல பிரதேசத்தின் கின்னூரில் வசிப்பவர் ஷியாம் சரண் நேகி, வரவிருக்கும் இமாசல பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்காக நவம்பர் 2-ம் தேதி அவர் தபால் மூலம் வாக்களித்தார். 106 வயதான அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார், இந்த சூழலில் இன்று அதிகாலையில் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருவதாகவும், அவருக்கு மரியாதையுடன் செலுத்தும் வகையில் இசைக் குழுவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கின்னவுர் அபித் உசேன் தெரிவித்துள்ளார்.

1917-ல் ஜூலை 1ம் தேதி பிறந்த நேகி, கல்பாவில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். 1947ல் ஆங்கிலேயர் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, 1951ல் இந்தியா தனது முதல் பொதுத் தேர்தலை நடத்தியபோது, ​​அக்டோபர் 25ஆம் தேதி நேகிதான் முதலில் வாக்களித்தார். அந்த முதல் தேர்தலுக்கான பெரும்பாலான வாக்குப்பதிவு பிப்ரவரி 1952 ல் நடந்தது. ஆனால், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இமாசல பிரதேசத்தில் வானிலை மோசமாக இருக்கும் என்பதால், வாக்காளர்களுக்கு சிரமம் ஏற்படும் என்ற காரணத்தால் அங்கு ஐந்து மாதங்களுக்கு முன்னதாகவே தேர்தல் தேர்தல் நடத்தப்பட்டது. ஷியாம் சரண் நேகி ‘சனம் ரே’ என்ற இந்திப் படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்தார். நேகியின் மறைவிற்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Posts