Home Archive by category

சுகாதார ஊழியர்களுக்கு குரங்கு காய்ச்சல் தொற்று பரவும் அபாயம்

இலங்கையில் இனங்காணப்பட்ட குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் ஊடாக சுகாதார ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே இதனைத் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்கும் போது சுகாதார ஊழியர்கள் பாதுகாப்பாக பணியாற்றுவதால் அவர்களுக்கு வைரஸ் பரவும் அபாயம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபரின் குடும்ப உறுப்பினர்களுக்கு வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாகவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பிசிஆர் மூலம் அடையாளம் காணப்பட்ட குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபரின் மாதிரிகள் மரபணு வரிசை பகுப்பாய்வு மூலம் உடனடியாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

Related Posts