Home Archive by category

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இலங்கையர் வெளியாகியுள்ள தகவல்

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இலங்கையர் தற்போது குணமடைந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருடன் நெருக்கமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் Monkeyfox தொற்றுக்குள்ளான முதலாவது நபர் நேற்று அடையாளம் காணப்பட்டதுடன், அவர் இம்மாதம் முதலாம் திகதி துபாயிலிருந்து இலங்கைக்கு வந்த 19 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனாவினைப் போல் அல்லாமல், மக்களிடையே பரவுவது மிகக் குறைவு, ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, Monkeyfox தொடர்பான நோய் கண்காணிப்பு அமைப்பு சரியாகச் செயற்படுவதாகவும், இது தொடர்பான பரிசோதனைகளுக்கு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் சகல வசதிகளும் மருந்துகளும் இருப்பதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார நிறுவனங்களின் தலைவர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகத்திற்கிடமான நோயாளிகளை அவர்கள் உன்னிப்பாக கவனித்து வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார். 

Related Posts