ஆஸி.க்கு மரண பயம் காட்டிய ஆப்கானிஸ்தான்

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று அவுஸ்ரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அணி வீரர்கள் அதிரடியால் ஓட்டம் 200-க்கு மேல் வரும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆப்கானிஸ்தானின் துல்லியமான் பந்து வீச்சால் 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களை எடுத்தது. அதிகப்பட்சமாக மெக்ஸ்வெல் அரை சதம் அடித்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
169 ஓட்டம் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. இதையும் படியுங்கள்: டி 20 உலக கோப்பை கிரிக்கெட்: ஹாட்ரிக் விக்கெட் எடுத்து ஜோஷ் லிட்டில் சாதனை தொடக்க ஆட்டக்காரர்களாக குர்பாஸ் – கானி ஆடினர். கானி தொடக்க முதலே தடுமாறினார். அவர் 7 பந்துகளில் 2 ஓட்டம் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த இப்ராஹிம் பொறுமையாக விளையாடினார். ஒருபக்கம் அதிரடி காட்டிய குர்பாஷ் 17 பந்தில் 30 ஓட்டம் எடுத்தார்.
அதில் 2 பவுண்டரி 2 சிக்சர் அடங்கும். இதனையடுத்து இப்ராஹிம் – குல்பாடின் நைப் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். ஒரு கட்டத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற சதவிதத்தில் ஆப்கானிஸ்தான் 66 சதவிதமும் அவுஸ்ரேலியா 34 சதவிதமும் இருந்தது. இந்நிலையில் 13-வது ஓவரை ஆடம் சம்பா வீசினார். முதல் பந்தில் 2 ஓட்டம் எடுக்க முயற்சித்த போது குல்பாடின் நைப் ஆட்டம் இழந்தார் . 2-வது பந்தில் இப்ராஹிம் 26 4-வது பந்தில் நஜிப்புல்லா 0 ஆட்டமிழந்தனர்.
அடுத்த ஓவரில் நபி 1 ஓட்டம் பெற்று ஆட்டம் இழந்தார் . எடுத்த அவுஸ்ரேலிய அணி இதனால் ஆட்டம் அவுஸ்ரேலிய பக்கம் திரும்பியது. 14.3 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 103 ஓட்டம் பெற்று 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அடுத்ததாக ரஷித்கான் -ரசூல் ஜோடி அதிரடியாக விளையாடி ஓட்டம் சேர்த்தனர்.
குறிப்பாக ரஷித் கான் 3 சிக்சர்களை விளாசினார். கடைசி ஓவரில் 22 ஓட்டம் தேவைப்பட்டது. ரஷித் கானின் அதிரடியில் கடைசி 2 பந்தில் ஆப்கானிஸ்தானுக்கு 11 ஓட்டம் தேவைப்பட்டது. 5-வது பந்தில் 2 ஓட்டம் கடைசி பந்தில் பவுண்டரியும் எடுக்கப்பட்டது.
இதனால் அவுஸ்ரேலிய அணி 4 ஓட்டம் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை வெற்றிக்கு போராடிய ரஷித் கான் 23 பந்தில் 48 ஓட்டம் பெற்று கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவுஸ்ரேலிய தரப்பில் சம்பா, ஹசில்வுட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்