Home Archive by category

சனியின் வக்ர நிவர்த்தியும் செவ்வாயின் வக்ர கதியும் இந்த 4 ராசிகளுக்கு அருமை

ஜோதிட சாஸ்திரப்படி, செவ்வாய் கிரகம் வக்ர கதியில் நகர்வது, பல ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியைத் தரும். அவர்களுக்கு பண ஆதாயத்துடன் பதவி உயர்வு கிடைக்கும். கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகம், அக்டோபர் 16 அன்று ரிஷப ராசியில் சஞ்சரித்த பிறகு, மீண்டும் அக்டோபர் 30 மாலை, 06:54 மணிக்கு, பின்னோக்கி திரும்பி சஞ்சரிக்கிறார். பெரும்பாலான கிரகங்களின் பிற்போக்கு இயக்கம், பலருக்கு வாழ்க்கையில் துயரத்தைத் தரும். ஆனால், வக்ர கதியில் இயங்கும் செவ்வாயால் அதிர்ஷ்டத்தை அனுபவித்து வரும் இந்த 4 ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவானின் வக்ர சஞ்சாரம் வளமான வாழ்வைத் தரும்.

செவ்வாய், தற்போது வக்ர கதியில் இயங்கத் தொடங்கியுள்ள நிலையில், அக்டோபர் 23 ஆம் தேதி, சனி பகவான் வக்ர நிலையிலிருந்து மாறி நேர் இயக்கத்துக்கு மாறியுள்ளார். இந்த இரண்டு கிரகங்களின் பெயர்ச்சியும் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ராசியாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ரிஷபம்- செவ்வாயின் எதிர்திசைப் பயணம் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை மட்டுமே தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வருமானம் உயரும். பணி மற்றும் பணிச்சூழலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. மரியாதை அதிகரிக்கும்.

சிம்மம் - செவ்வாய் கிரகத்தின் வக்ர இயக்கம், சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். இந்த நேரத்தில், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவுடன் முன்னேறுவீர்கள். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கலாம். மனதில் நிம்மதியாக உணர்வீர்கள்

கன்னி - செவ்வாய் வக்ர கதியில் சஞ்சரிப்பது, கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வருமானம் பெருகும். வாகனம், கட்டிடம் வாங்கும் அமைப்பும் ஏற்படும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.

கும்பம்- செவ்வாய் கிரகம் கும்ப ராசிக்காரர்களுக்கு தைரியத்தையும் வலிமையையும் அதிகரிக்கும். இந்த நேரத்தில், நீங்கள் எல்லாவற்றையும் எளிதாக செய்ய முடியும். பணியிடத்தில் மாற்றம் ஏற்படலாம். பண வரவுகள் இருக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம் இது.  

Related Posts