இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் எத்தனை பேர்?; வெளியானது அறிவிப்பு

இரட்டைக் குடியுரிமை தொடர்பான விசாரணைகள் இன்று நிறைவடையவுள்ளதாகவும், இதுவரை இடம்பெற்ற விசாரணைகளில் இரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை எனவும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், குடிவரவுத் திணைக்களம், பாரா ளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து எம்.பி.க்களின் பிறந்த திகதி மற்றும் தேசிய அடையாள எண்களை பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் இருந்து பெற்று, அதனடிப்படையில் இரட்டைக் குடியுரிமை தொடர்பான விசாரணைகளை தொடங்கியமை குறிப்பிடத்தக்கது .