Home Archive by category

ரஷ்யா- உக்ரைன் இடையே போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்பு!

ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே சண்டைநிறுத்தம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஜெர்மனியின் முன்னைய பிரதமர் கெர்ஹார்ட் ஷ்ரோடர் (Gerhard Schroeder) கூறியிருக்கிறார்.

முடங்கிக்கிடக்கும் மில்லியன் கணக்கான டன் உக்ரேனியத் தானியங்களை வெளியே கொண்டுவருவதன் தொடர்பில் ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில், அதன் விளைவாய்ப் போர் நிறுத்தம் வரலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரேனியப் போரைப் பேச்சுவார்த்தையின் மூலம் முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா விரும்புவதாகத்கெர்ஹார்ட் ஷ்ரோடர் (Gerhard Schroeder) குறிப்பிட்டார்.

அத்துடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைக் (Vladimir Putin)கடந்த வாரம் சந்தித்ததாக ஜெர்மனியின் முன்னைய பிரதமர் கெர்ஹார்ட் ஷ்ரோடர் (Gerhard Schroeder) தெரிவித்தார்.

அதேவேளை ரஷ்யாவின் உக்ரேனியப் படையெடுப்பைக் குறைகூறியபோதிலும் கெர்ஹார்ட் ஷ்ரோடர் (Gerhard Schroeder அதிபர் புட்டினை (Vladimir Putin) இதுவரை கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Posts