Home Archive by category

யாழில் இளைஞர்கள் இருவர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை - புலோலி சிங்கநகர் பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றிலிருந்து இரு இளைஞர்களின் சடலங்கள்  நேற்றைய தினம் (24) இரவு மீட்கப்பட்டுள்ளன.

பருத்தித்துறை பன்னங்கட்டு பகுதியைச் சேர்ந்த சுசேந்தகுமார் சசிகாந் (வயது- 24), மற்றும் மந்திகை உபயகதிர்காமம் பகுதியைச் சேர்ந்த கணேசலிங்கம் லம்போசிகன் (வயது 24) ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை  முன்னெடுத்துள்ளனர். 

Related Posts