Home Archive by category

சீன ஜனாதிபதியாக மூன்றாவது முறையாக தேர்வான ஜின்பிங்

சீனாவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழு மாநாட்டில் அதிபர் ஜி ஜின்பிங் மீண்டும் அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும்.இதில் கட்சியின் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவரே அதிபராகவும் இருப்பார்.

அந்த வகையில் அதிபர் ஜி ஜின்பிங் பதவி காலம் முடிவடைந்த நிலையில் சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழு மாநாடு கடந்த 16ம் திகதி தலைநகர் பிஜீங்கில் தொடங்கியது.

தற்போது மாநாடு முடிவடைந்த நிலையில் அதிபர் ஜி ஜின்பிங் மூன்றாம் முறை சீனாவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2013ஆம் ஆண்டு முதல்  அதிபர் பதவியில் ஜி ஜின்பிங் இருந்து வருகிறார்.

சீனாவில், ஒருவர் இரண்டு முறை மட்டும்தான் அதிபராக இருக்கலாம் என்ற விதிமுறையை 2018ஆம் ஆண்டு அதிபர் ஜின்பிங் நீக்கினார்.

69 வயதான அதிபர் ஜி ஜின்பிங் மேலும் 5 ஆண்டுகள் சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் நாட்டின் அதிபராகவும் மற்றும் ராணுவத்தின் தலைவராகவும் பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts