பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தில் கடும் பதற்றம்; பொலிஸார் குவிப்பு

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்ட பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பொலிஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இந்த நிலையில் அப்பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பமாவதற்கு முன்னதாகவே பொலிஸார் தடை உத்தரவொன்றினை கொண்டு வந்து மாணவர்களிடம் கையளித்த போது அங்கு ஒரு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
என்ற போதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த தடை உத்தரவினை ஏற்க மறுத்துள்ளனர்.
இதேவேளை களனி பல்கலைக்கழகத்தின் முன்னால் உள்ள பிரதான வீதி மூடப்பட்டுள்ளது.