Home Archive by category

உக்ரைனிற்கு வான் பாதுகாப்பு; G7 அமைப்பு நாடுகள் உறுதி

கடந்த திங்கட்க்கிழமை ரஷ்யா, உக்ரைனின் கீவ் நகரத்தின் மீது மிக மோசமான ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டிருந்ததைத் தொடர்ந்து உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, g7 அமைப்பு நாடுகளுடன் அவசர கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், உக்ரைனிற்கு, நிதி, நீதி, இராணுவ, மனிதாபிமான, இராஜாங்க ஆதரவுகள் அனைத்தையும் வழங்குவதற்கு தயாராக உள்ளதாக g7 அமைப்பு நாடுகள் உறுதியளித்துள்ளன.

அதேவேளை, உக்ரைனிற்கு இந்த நாடுகள் இணைந்து வான் பாதுகாப்புத்தொகுதியை உருவாக்குவதற்கு நிதி உதவியை வழங்க வேண்டும் எனக் கேட்டுள்ளார் உக்ரைன் ஜனாதிபதி.

இதற்கு பதிலளிக்கும் விதத்தில், தேவைப்படும் வரையில் உக்ரைனிற்கு வேண்டிய அனைத்தையும் செய்வோம் என g7 நாடுகள் வாக்குறுதியளித்துள்ளன. ரஷ்யாவின் தாக்குதல் தொடர்பாகக் கருத்து வெளியிட்டிருந்த ஜப்பான் பிரதமர், ரஷ்யா அணுவாயுத தாக்குதல்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளதா என்பது குறித்து உக்ரைன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Related Posts