தீவிரவாத பட்டியலில் இணையும் Meta!

மார்க் ஸுகேர்பேர்க் கின் meta நிறுவனம் தற்போது ரஷ்யாவினால், தீவிரவாத மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் ரஷ்யா உக்ரைன் போர் ஆரம்பமாகியிருந்த நிலையில், ரஷ்யாவிற்கு எதிரான தகவல்களை ஆதரித்த அல்லது பரவுவதற்கு அனுமதித்த குற்றத்திற்காக facebook மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் மீது தடை விதித்திருந்தது ரஷ்யா.
இந்த நிலையில் தற்போது ரஷ்யாவின் நிதி கண்காணிப்பு நிறுவனமான rosfin monitoring நிறுவனம், meta நிறுவனத்தை தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இணைத்துள்ளது.
இன்ஸ்டாகிராம், ரஷ்யாவைச் சேர்ந்த வணிக நிறுவனங்கள் மற்றும் தனியார்களிற்கு வணிக பிரச்சாரங்களிற்கு அதிக பங்காற்றி வந்ததால், ரஷ்யாவில் உள்ள பாவனையாளர்கள் ஏற்கனவே இந்த செயலிகளை vpn மூலம் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதால், பயன்படுத்தப்பட முடியாத நிலை எழுந்துள்ளது.
ஏற்கனவே இந்த பட்டியலில், தலிபான்கள் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான அரசியல் கட்சிகள் பட்டியலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.