Home Archive by category

போதைக்கு அடிமை ; "எனது மகன் எனக்கு வேண்டாம்"; தாய் எடுத்த முடிவு- யாழில் சம்பவம்

"எனது மகன் எனக்கு வேண்டாம்" என தாய் ஒருவர் கடிதம் எழுதி தனது மகனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். 

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவில் அரச சான்று பெற்ற அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் அவரது மகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதியில் வசிக்கும் தாயொருவர் தனது 15 வயது மகன் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளமையால், மகனை தன்னால் பராமரிக்க முடியவில்லை என கூறி " எனது மகன் எனக்கு வேண்டாம்" என தனது கைப்பட கடிதம் எழுதி பொலிஸாரிடம் வழங்கி , தனது மகனையும் பொலிஸாரிடம் ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார். 

அதனை அடுத்து பொலிஸாரினால் குறித்த சிறுவன் சிறுவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து , சிறுவனை அரச சான்று பெற்ற அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்குமாறு மன்று உத்தரவிட்டதற்கு அமைய சிறுவன் நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.  

Related Posts