Home Archive by category

வேல்ஸ் இளவரசராக வில்லியம்மை ஒருபோதும் ஏற்க முடியாது - வலுக்கும் எதிர்ப்பு

தேசியவாதிகள் என தங்களை அடையாளப்படுத்தியுள்ள வடக்கு வேல்ஸில் உள்ள கவுன்சில் ஒன்று வேல்ஸ் இளவரசராக வில்லியம் ஏற்க முடியாது என அறிவித்துள்ளனர்.

பிரித்தானிய ராஜ குடும்பத்து உறுப்பினரான இளவரசர் வில்லியம் பழமைவாதி எனவும் அடக்குமுறைகளின் வழித்தோன்றல் எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும், வேல்ஸ் இளவரசர் என்ற பட்டத்தை நீக்க வேண்டும் எனவும் வடக்கு வேல்ஸில் உள்ள அந்த கவுன்சில் ஒருமனதாக வாக்களித்துள்ளது முடிவெடுத்துள்ளது.

மன்னர் சார்லஸுக்கு ராணியாரால் வேல்ஸ் இளவரசர் பட்டம் அளிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கோட்டையில் வைத்தே, இளவரசர் வில்லியத்திற்கு எதிரான கூட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இளவரசர் வில்லியத்திற்கு குறித்த பட்டமளிக்கப்பட்டது தொடர்பில் உறுப்பினர்கள் எவரும் குறிப்பிடவில்லை என்றே தெரியவந்துள்ளது. மேலும், வேல்ஸ் இளவரசர் பட்டம் வில்லியத்திற்கு அளிக்கப்பட்டது, ஒரு சர்க்கஸ் விளையாட்டு என உறுப்பினர் ஒருவர் கிண்டலடித்துள்ளார்.

இந்த கூட்டத்திற்கு வேல்ஸ் மக்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், இனிமேலும், பிரித்தானிய ராஜ குடும்பத்தால் வேல்ஸ் இளவரசர் பட்டம் சூட்டப்படுவதை அனுமதிக்க வேண்டுமா என்ற விவாதமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related Posts