அரசாங்கத்துக்கு பீரிஸ் விடுத்துள்ள எச்சரிக்கை

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை மேலும் ஒத்திவைப்பதற்கு அரசு தீர்மானித்தால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்தார்.
சுதந்திர மக்கள் சபையால் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் வைத்தே நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
உரிய திகதி ஒன்றைத் தீர்மானிக்காது சட்டவிரோத காரணங்களை முன்வைத்து உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரசியல் இலாபத்துக்காக மாத்திரமே தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிவார்கள்.
அரசின் இந்தத் தீர்மானத்துக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து வலுவான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
அரசின் மக்கள் விரோதச் செயற்பாடுகளுக்கு ஜனநாயக ரீதியில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் நாங்கள் முன்னெடுப்போம்” என்றார்.