வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவில் களவாடப்பட்ட 15 பவுண் நகை

வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களின் நகைகள் திருடப்பட்டுள்ளதாக என பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வரலாற்று சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந்திருவிழாவில் நேற்று தேர்த்திருவிழா இடம்பெற்றது.
தேர்த்திருவிழாவில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் பங்கேற்றுள்ளனர்.
தேர்த்திருவிழாவில் நேற்றிரவு கிடைக்கப்பெற்ற 7 முறைப்பாடுகளின் அடிப்படையில் 15 பவுண் தங்கநகைகள் திருடப்பட்டுள்ளதாக என பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தேர்த்திருவிழாவைவிட இன்றைய சமுத்திரத் தீர்த்த திருவிழாவில் அதிகளவு அடியவர்கள் பங்கேற்பர் என்ற அடிப்படையில் தமது நகைகள் மற்றும் பணம் தொடர்பில் முன் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.