Home Archive by category

ஐ.சி.சி வெளியிட்டுள்ள புதிய 8 சுவாரசியமான விதிமுறைகள்

ICC வெளியிட்டுள்ள புதிய 8 சுவாரசியமான விதிமுறைகள் | October 1 முதல் அமுல்
1. மன்கட் அவுட் செய்யும் முறையை சர்ச்சையின்றி ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு அவுட் என இன்று எம்சிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் அதுபோன்ற முறையில் ஒருவர் அவுட் செய்யப்பட்டால் இனிமேல் அது மன்கட் என அழைக்கக் கூடாது, மாறாக ரன்-அவுட் என்றுதான் அழைக்க வேண்டுமென எம்சிசி மிகவும் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
இது மட்டுமல்லாமல் கிரிக்கெட் பந்துகளில் பந்துவீச்சாளர்கள் சலிவா பயன்படுத்துவது மற்றும் கேட்ச் பிடிக்கும் போது அடுத்து வரும் பேட்ஸ்மேன் அடுத்த பந்தை எதிர்கொள்ள வேண்டும் என்பது போன்ற விதிமுறைகளை எம்சிசி புதிதாக அறிவித்துள்ளது. அந்த புதிய விதிமுறைகள் இதோ: 1. 41.46 விதிமுறையில் இருந்த எதிர்ப்புறம் இருக்கும் பேட்டரை அவுட் செய்யும் முறை தற்போது 38வது விதிமுறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் அதன் பெயர் அதேபோலவே இருக்கும் (ரன்-அவுட்).

2. கொரோனா காரணமாக தற்காலிகமாக பந்தில் சலிவாவை பயன்படுத்த பந்துவீச்சாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நிரந்தரமாக மாற்றப்பட்டுள்ளது.

3. இதுநாள் வரை கேட்ச் பிடிப்பதற்கு முன்பு எதிர்புறத்தில் இருந்த பேட்டர் பந்தை எதிர்கொள்ளும் இடத்திற்கு வந்து விட்டால் அடுத்து வரும் பேட்டர் எதிர்புறத்தில் களமிறங்கலாம். ஆனால் இனிமேல் கேட்ச் பிடித்து ஒரு பேட்டர் அவுட்டானாலும் கூட அடுத்து வரும் பேட்டர் எதிர் புறத்திற்கு செல்லாமல் நேரடியாக பந்தை எதிர்கொள்ளும் இடத்தில் களமிறங்க வேண்டும் என்ற புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

4. இத்துடன் பறவைகள், நாய்கள் போன்ற வெளிப்புற காரணிகளால் ஒரு பந்து தடை படும் பட்சத்தில் அது “டெட் பால்” என அம்பயர்களால் அறிவிக்கப்படும்.

5. ஒரு பந்து வீச்சாளர் பந்து வீசுவதற்கு முன்பாக அதை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேனை அவுட் செய்ய முயற்சித்தால் அது “டெட் பால்” என அறிவிக்கப்படும்

6. இதற்கு முன்பு வரை ஒரு வெள்ளை கோட்டை பொறுத்தே வைட் பந்துகளை அம்பயர்கள் தீர்மானித்தனர். ஆனால் இனிமேல் ஒரு பேட்டர் எங்கு நிற்கிறார் என்பதை பொருத்து வெள்ளை கோட்டை வைத்து வைட் பந்துகளை தீர்மானிக்க புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

7. ஒரு சில நேரங்களில் பந்து வீச்சாளர்களின் கைநழுவி பந்து தவறான இடத்தில் வீசப்படும். அதுபோன்ற நேரங்களில் அந்தப் பந்து பிட்ச்க்குள் இருக்கும் பட்சத்தில் அதை ஒரு பேட்டர் அடித்து ரன்கள் எடுக்க முயற்சிக்கலாம். இருப்பினும் அந்த பந்து அதற்கு வெளியே இருக்கும் பட்சத்தில் அதை அம்பயர் டெட் பால் என அறிவிப்பார். அதேபோல் ஒரு பேட்டர் பிட்ச்க்கு வெளியே சென்று அடிக்கும் எந்த ஒரு பந்துகளும் டெட் பால் என அறிவிக்கப்படும்.

8. இதுநாள் வரை பீல்டிங் செய்யும்போது பந்து வீசத் தொடங்கிய பின் மாற்றம் செய்யப்பட்டால் அதை டெட் பால் என அறிவிக்கப்பட்டு வந்தது. ஆனால் இனிமேல் அதற்கு பதிலாக அதற்கு தண்டனை அளிக்கும் வண்ணமாக 5 ரன்கள் பெனால்டி வழங்கப்படும்.

Related Posts