Home Archive by category

யாழ்.பல்கலையில் சங்காவின் சிலை:தொடரும் சர்ச்சை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 2004 ஆம் ஆண்டு மினி ஒலிம்பிக் சம்பியன் கிரிக்கெட் அணி மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே , இலங்கையின் புகழ்பூத்த கிரிக்கெட் வீரர் சங்கக்காரவின் சிலையை வடிவமைத்துக் கொடுத்ததாக , குறித்த சிலையை வடிவமைத்த ஜோசப் ஜொரோமின் மார்க் தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவுவதற்காக இலங்கையின் புகழ்பூத்த துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககாரவின் சிலை வடிவமைக்கப்பட்டதாக , சில ஊடகங்களில் தகவல் வெளியானது.

இந்த விடயம் தொடர்பில் குறித்த சிலை வடிவமைப்பாளர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கும் போது,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விளையாட்டுத்துறை அலகில் , விளையாட்டு வீரர்களின் சிலைகளை காட்சிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

காற்பந்தாட்டம் , துடுப்பாட்டம் என அனைத்து வகையான விளையாட்டுகள் தொடர்பில் , குறிப்பிட்ட அனைத்து விளையாட்டுக்களில் சாதனை படைத்த ஜாம்பவான்களின் உருவச்சிலைகளை விளையாட்டுத் துறை அலகில் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதற்காகவே கிரிக்கெட் வீரர் சங்கக்காரவின் சிலை உருவாக்கப்பட்டது . மேற்படி சிலையானது கண்ணாடி இழையினால் வடிவமைக்கப்பட்டதெனவும் அவர் தெரிவித்தார்.

மன்னார் வங்காலையைச் சேர்ந்த , மன்னார் சித்தி விநாயகர் பாடசாலை ஆசிரியரான ஜோசப் ஜொரோமின் மார்க் , யாழ்.பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப்பீடத்தில் சித்திரமும் வடிவமைப்பும் துறையைச் சேர்ந்த பட்டதாரியாவார்.

இவரது பரம்பரையினர் சிற்பக்கலைகளில் சிறந்து விளங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

Related Posts