ஜனாதிபதி லண்டன் சென்றடைந்துள்ளார்

பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்கில் கலந்துக்கொள்வதற்காக இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, லண்டன் நகரை சென்றடைந்துள்ளார்.
லண்டன் சென்றடைந்த ஜனாதிபதியை வரவேற்பதற்காக பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி செயலகத்தின் இந்திய-பசுபிக் பிராந்திய பணிப்பாளரும் இந்தியாவுக்கான பணிப்பாளருமான பென் மெலர், பிரித்தானிய அரசரின் விசேட பிரதிநிதி பிரதி லெப்டினட் டேவ் ஈஸ்டன் மற்றும் பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன ஆகியோர் விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்.
லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் அபேவில் நாளை நடைபெறும் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துக்கொள்ளும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 21 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார்.