மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக மார்க் பவுச்சர் நியமனம்

ஐபிஎல் எனப்படும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை சாம்பியம் பட்டம் வென்றது.
இந்த அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்தவர் ஜெயவர்தனே. இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரராக இருந்த இவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் உலகலாவிய பிரிவின் இயக்குநராக
நியமிக்கப்பட்டார்.
இதனால் எதிர்வரும் 2023 ஐபிஎல் சீசனுக்கான மும்பை இந்தியன் அணிக்கு, தலைமை பயிற்சியாளராக தென் ஆப்ரிக்கா முன்னாள் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர் நியமிக்கப்பட்டார்.ஒரு பிரபல கிரிக்கெட் வீரராகத் திகழ்ந்த இவர் விக்கெட் கீப்பராக அதிக வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தவர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.
ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி கூறுகையில்,
“மார்க் பவுச்சரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பயிற்சியாளராக
வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அணிக்கு மகத்தான மதிப்பை சேர்ப்பதோடு அதன் பாரம்பரியத்தை அவர் முன்னெடுத்துச் செல்வார்” என்றார்.