Home Archive by category

கிர்கிஸ்தான்- தஜிகிஸ்தான் எல்லைப் போரில் உயிரிழப்புக்கள் அதிகரிப்பு

மத்திய ஆசியாவின் சிறி மலை நாடுகளான கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் நேற்ற முன்தினம் திடீரென எல்லைப் போர் ஒன்றினை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்படி இரு நாடுகளும் தமக்கிடையில் சுமார் 970 கிலோ மீற்றர் தூர எல்லைப் பகுதியை பகிர்ந்து வருவதாகவும் இந்த எல்லைப் பகுதியினையொட்டி தொடர் முரண்பாடுகள் காணப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில் தீடிரென ஆரம்பித்த மோதல்களின் போது கிர்கிஸ்தான் தரப்பில் சுமார் 24 இராணுத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 87ற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை தஜிகிஸ்தான் தரப்பு இழப்புக்கள் மற்றும் சேதங்கள் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.

இந்த எல்லை போரை உடனடியாக நிறுத்துமாறு நேற்றைய தினம் உஸ்பெஸ்கிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் ஆனாலும் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி இரு நாடுகளுக்கிடையில் இறுதியாக கடந்த 2021ம் ஆண்டு மோதல் சம்பவம் நடைபெற்றதாகவும் மேற்படி மோதலின் போது 50 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts