Home Archive by category

கனடா முழுவதும் கடுமையாக சரிவடைந்த வீட்டு விலைகள்

கனடா வங்கி வட்டி வீதத்தை அதிகரித்துள்ள நிலையில், வீட்டு விலைகள் கடும் சரிவை எதிர்கொண்டு வருகின்றன. கனடாவில் பொருளாதார மந்தநிலைக்கு சாத்தியங்கள் அதிகரித்து வருவதாக அச்சம் எழுந்துள்ள வேளையில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் கனடாவில் சராசரியாக ஒரு வீட்டின் விலை 637,673 டொலர் என தெரியவந்துள்ளது. இது 2021 ஆகஸ்டு மாதத்துடன் ஒப்பிடுகையில் 3.9% சரிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் குறிப்பிட்ட மாகாணங்களில் வீட்டு விலைகள் அதிக சரிவை எதிர்கொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது. ஒன்ராறியோவில் கடந்த மாதம் வீட்டு விலை 904,800 டொலராக இருந்தது. இது கடந்த பிப்ரவரி மாத்தில் இருந்து 15.9% சரிவடைந்ததாக கூறப்படுகிறது.

அதே வேளை கிரேட்டர் ரொறன்ரோவில் இதே காலகட்டத்தில் 15.2% சரிவடைந்ததாக கூறப்படுகிறது. ஓக்வில்லே, லண்டன் மற்றும் கிச்சனர்-வாட்டர்லூ ஆகிய பகுதிகளில் 23 சதவீதம் சரிவைக் கண்டன.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஆகஸ்டு மாதம் 995,500 டொலர் என ஒரு வீட்டின் விலை இருந்துள்ளது. இது கடந்த 6 மாதங்களுக்கு முன்பிருந்த விலையில் 5% சரிவடைந்ததாக தெரிய வந்துள்ளது.

கியூபெக்கில் மே மாதத்தில் இருந்தே வீட்டு விலைகள் சரிவடையத் தொடங்கியுள்ளன. ஆகஸ்டு மாதத்தில் ஒரு வீட்டின் விலை 489,900 டொலர் என இருந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் ஒப்பிடுகையில் 2.5% சரிவடைந்துள்ளது.

இதேபோல், மாண்ட்ரீலில் வீட்டு விலைகள் 2.4 சதவீதம் சரிவடைந்து, $523,700ல் வீடுகள் விறபனையாகி வருகிறது. ஆனால் கியூபெக் சிட்டியில் வீட்டு விலைகள் 1.4 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது.

நோவா ஸ்கொடியாவில் பிப்ரவரி 2022 மற்றும் ஆகஸ்ட் 2022 க்கு இடையில் வீட்டின் விலை 10.3 சதவீதம் உயர்ந்து, $395,300 ஆக விற்கப்படுகிறது. மே மாதத்தில் இப்பகுதியில் வீட்டின் விலை 417,500 டொலர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Posts