Home Archive by category

'ஐ.நா ஆணையாளரின் அறிக்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் பிரதிபலிக்கவில்லை'

ஐ.நா ஆணையாளரின் அறிக்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் போதியளவு பிரதிபலிக்கவில்லை என அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. அமர்வு தொடர்பில் இணையத்தள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமை அமர்வில், சில விடயங்கள் தமிழ் மக்களுக்கு சார்பாக பேசப்பட்டாலும், தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினை தொடர்பில் அங்கு ஆணையாளர் வெளிப்படுத்தவில்லை.

குறிப்பாக தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு என்னும் பிரச்சினை பிரதானமாக காணப்படுகிறது. ஆகவே அது பற்றி அங்கு பேசப்படவில்லை.

இன அழிப்புக்கான நீதி கோரல், ஆக்கிரமிப்பு, காணி பறிப்பு, அரசியல் கைதிகள் உள்ளிட்ட ஐந்து வகையான பிரச்சினைகள் பாரிய அளவில் பேசப்படவில்லை.

இது தமிழ் மக்களை திருப்திப்படுத்தும் வகையில் அமையவில்லை. நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையை காரணம் காட்டி பல விடயஙக்ளில் அரசு தப்பித்துக் கொள்கிறது.

இங்கே இடம்பெற்ற இன ஒடுக்குமுறையால் தான் போர் ஏற்பட்டது. அதன்பின்னர் இவ்வாறான பிரச்சினைகள் மேலும் வலுப்பெற்றது என்பது தொடர்பில் ஐ.நாவில் பேசப்படவில்லை.

பொறுப்புக்கூறல் என்ற விடயத்தில் காலம் தாழ்த்தும் அரசிடம் மீண்டும் மீண்டும் அந்தப் பணிகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை பலன் தராத ஒரு விடயமாகவே காணப்படுகிறது.

சிங்கள இனத்தவர்களின் பிரச்சினைகளை பெரிதாகவும், தமிழர்களின் பிரச்சினைகளை சிறிதாகவும் காட்டும் செயற்பாடு தற்போதும் தொடர்கிறது.என்றார்.

Related Posts