Home Archive by category

கருணாநிதியின் பேனா சிலை அமைக்க மத்திய சுற்றுசூழல் துறைக்கு தமிழக பொதுப்பணி துறை கடிதம்

முன்னாள் முதல்வர்  கருணாநிதியைக் கவுரவப்படுத்தும் விதமாக, அவரது நினைவிடம் அருகே கடலினுள் 134 அடி உயர பேனா சின்னத்தை நிறுவ மத்தியஅரசின் சுற்றுசூழல் துறையின் ஒப்புதலை தமிழக பொதுப்பணித் துறை கோரியுள்ளது.

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். அவரது உடல் மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டபோது, அவர் பயன்படுத்திய பேனாவும் உடன் வைத்து அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில், ரூ.39 கோடியில் 2.21 ஏக்கர் பரப்பில் நினைவிடம் அமைக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும், பேனா' நினைவுச்சின்னத்தை ஒட்டி புல்வெளிகள் உள்பட கண்ணை கவரும் வகையிலான கலை நயமிக்க ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன. கருணாநிதி நினைவிடத்தில் இருந்து நடுக்கடலில் அமைக்கப்படும் 'பேனா' நினைவுச்சின்னத்துக்கு 290 மீட்டர் நிலப்பரப்பிலும், 360 மீட்டர் கடலின் மேலேயும் செல்லும் வகையில் 650 மீட்டர் நீளத்தில் பிரமாண்ட இரும்பு பாலம் நிறுவப்படுகிறது.

கடல் அலைகள் எழும்பும் மட்டத்தில் இருந்து 6 மீட்டர் உயரத்தில், 7 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட உள்ள இரும்பு பாலத்தில் பார்வையாளர்கள் கடலின் அழகை ரசித்தவாறு நடந்து செல்வதற்கு ஏதுவாக கண்ணாடியிலான பாதை வசதிகளும் செய்யப்பட உள்ளன.

Related Posts