Home Archive by category

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை; விமலின் கோபம்

இலங்கையின் பாதுகாப்பு படைகளின் பிரதானிகளுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தின் அதிகாரத்தை பயன்படுத்துதல் மற்றும் மனித உரிமைகள் என்ற காரணங்களை காட்டி அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் அழுத்தங்கள் கொடுப்பது சம்பந்தமாக  நாடு என்ற வகையில் அனைத்து தரப்பினரும் அதனை கண்டிக்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 வது கூட்டத் தொடரில் முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில், இலங்கை இராணுவ பிரதானிகளுக்கு எதிராக சர்வதேச போர் குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதிமன்றத்தின் அதிகாரத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதனை இலங்கை அரசு நிராகரித்த 46/1 யோசனை மூலம் போர் குற்றங்கள் மற்றும் சாட்சியங்களை தொகுக்கும் சர்வதேச பொறிமுறைக்கு பயன்படுத்தப்படும்.

இதன் மூலம் சர்வதேச நீதிமன்ற அதிகாரத்தை நடைமுறைப்படுத்தி இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்யும் நாடுகளின் குற்றப்பத்திரிகைளுக்கு அந்த குற்றச்சாட்டுக்கள் மற்றும் சாட்சியங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கப்படும்.

அவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது எனவும் விமல் வீரஙவங்ச தெரிவித்துள்ளார்.

Related Posts