ஜனாதிபதியின் இல்லத்திற்கு தீ வைத்த மூவர் கைது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக இல்லம் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் குறித்த மூவரும் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிலியந்தலை மற்றும் நாரஹேன்பிட்டி ஆகிய பிரதேசங்களில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு 5 மற்றும் மடபாத ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 18 முதல் 22 வயதுக்கு இடைப்பட்ட நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.