Home Archive by category

கனடாவில் வாகனங்கள் தீப்பற்றிக் கொள்ளும் சம்பங்கள் குறித்து எச்சரிக்கை

கனடாவில் வாகனங்கள் தீப்பற்றிக் கொள்ளும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வருடாந்தம் ஆயிரக் கணக்கான வாகனங்கள் இவ்வாறு தீப்பற்றிக்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில், நடு வீதியில் திடீரென கார் ஒன்று தீப்பற்றிக்கொண்ட போது, காரில் பயணித்தவர் தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளார்.

றொரன்டோவைச் சேர்ந்த நபர் ஒருவர் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட விபத்தில் கார் தீப்பற்றிக் கொண்டது.

குயின் எலிசபத் வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கார் முழுமையாக தீக்கிரையாவதற்கு சில நொடிப்பொழுதுகள் முன்னதாக அருகாமையில் இருந்த ஐந்து பேர், வாகன சாரதியை மீட்டுள்ளனர்.

திரைப்பட ஹீரோக்கள் போன்று இந்த ஐந்து பேரும் சரியான நேரத்தில் வாகனத்திலிருந்து குறித்த நபரை மீட்டுள்ளனர்.

இன்னும் சில நொடிகள் தாமதித்திருந்தாலும் குறித்த சாரதியின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

கோடை காலத்தில் வெப்ப அலை நிலவி வரும் நிலையில் இவ்வாறான தீப்பற்றிக் கொள்ளும் சம்பவங்கள் அதிகளவில் வருடாந்தம் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விபத்து, உரிய முறையில் வாகனத்தை பராமரிக்காமை, தொழில்நுட்ப கோளாறு போன்ற காரணிகளினால் கனடாவில் வருடாந்தம் 10000 வாகனங்கள் தீப்பற்றிக் கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிக வெப்பநிலை வாகனத்தில் தொழில்நுட்ப கோளாறுகளை ஏற்படுத்தும் எனவும், இது வாகனம் தீப்பற்றிக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பத்தை உருவாக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

Related Posts