Home Archive by category

இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று!

இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக இன்று தகவல் வெளியானது.

மேலும் தொற்றின் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் கூறப்பட்டது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் இயக்குநர் மணிரத்னத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகவில்லை. கொரோனா அறிகுறிகள் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சோதனைகள் நடத்தப்பட்டதில் கொரோனா இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது என அவரது தரப்பு விளக்கமளித்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.

 

Related Posts