"மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி"

மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசியல் கூட்டணி ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
போராட்டங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் நாடு இந்த நிலைமைக்கு சென்றிருக்காது.
அந்த நடவடிக்கையை எடுக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தவறிவிட்டார்.
தற்போதைய ஜனாதிபதி ரணில் அந்த நடவடிக்கையை எடுக்கின்றமை மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.