Home Archive by category

எரிசக்தி நெருக்கடி; கூட்டிணையும் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி

ஐரோப்பாவில் தற்போது எரிசக்தி மற்றும் எரிவாயு என்பன பாரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளமை அவதானிக்கப்படுகின்றது.

ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது விதித்துள்ள பொருளாதார தடைகள் உட்ட இதர தடைகள் காரணமாக ஐரோப்பாவிற்கான தனது எரிவாயு மற்றும் எரிசக்தி வழங்கலை ரஷ்யா முற்றுமாக இதடை நிறுத்தியிருக்கின்றது.

இந்த நிலையில் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் எரிசக்தி பிரச்சனையை தீர்ப்பதற்கான சில முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் கோடை காலத்தில் எரிபொருளின் தேவை மேலும் அதிகரிக்கும் என்பதால் இரு நாடுகளும் பரிமாற்ற முறையிலான சில முன்னெடுப்புக்களை மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் நேற்றைய தினம் ஜேர்மனிய அதிபர்  ஓலாஃப் ஸ்கோல்ஸுக்கும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கும் இடையில் நடைபெற்ற தொலைக்காட்சி உரையாடலின் போது மேற்படி தீர்வு எட்டப்பட்டதாகவும் இதன்படி ஜேர்மனியிள் குளிர் காலத்திற்கு தேவையான மின்சாரத்தை பிரான்ஸ் வழங்குவதாகவும் அதுபோன்று பிரான்சிற்கு தேவையான எரிவாயுவை ஜேர்மனி வழங்குவதாகவும் மேற்படி பேச்சுவார்த்தையின் போது முடிவு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts