Home Archive by category

ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலையின் பின்னணியில் ராஜபக்சர்கள்

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலையின் பின்னணியில் ராஜபக்சர்கள் இருப்பதாக முன்னாள் விமானப்படை அதிகாரியும் ஊடகவியலாளருமான கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இந்த குண்டு தாக்குதலை நடத்திய புலி உறுப்பினர் நாட்டை விட்டே துரத்தியடித்ததாகவும், ராஜபக்சவின் உத்தரவின் பேரில் கருணா மற்றும் பிள்ளையான் கும்பல் திட்டமிட்டு படுகொலை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தெரிந்தாலும் பெர்னாண்டோபுள்ளேவின் பணத்தை காப்பாற்ற சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே இது குறித்து பேசவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்க தனது கைத்தொலைபேசியுடன் சிறைச்சாலையில் இருந்ததாகவும், சிறைக் கட்டிலில் உறங்க அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உட்பட 16 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு கடந்த முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி சஹன் மாபா பண்டார இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் செல்வராஜா கிருபாகரன் மற்றும் செனரத் லக்ஷ்மன் குரே ஆகிய சந்தேகநபர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 06ம் திகதி வெலிவேரிய காந்தி விளையாட்டரங்கிற்கு அருகில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட 16 பேர் கொலை செய்யப்பட்டமை மற்றும் 84 பேரைக் கொல்ல முயற்சித்தமை உள்ளிட்ட 31 குற்றச்சாட்டுகளின் கீழ் அப்போதைய கம்பஹா பொலிஸ் அத்தியட்சகர் லக்‌ஷ்மன் குரே மற்றும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் செல்வராஜா கிருபாகரன் ஆகியோர் மீது சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான குற்றச்சாட்டுகளை பரிசீலித்த கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி சஹன் மாபா பண்டார, சந்தேக நபர்களை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்ய உத்தரவிட்டிருந்தார்.

Related Posts