இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா; நாளை முதல் அமுலுக்கு வரும் கட்டுப்பாடு

மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், முகக்கவசம் அணியாதவர்களுக்கு எரிபொருள் வழங்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த நடைமுறை நாளை (திங்கட்கிழமை) முதல் நடைமுறைக்கு வரவுள்ளதோடு, வரிசைகளில் காத்திருக்கும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்படும் என சங்கத்தின் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், எரிபொருள் நிலையங்களுக்கு வருபவர்களுக்கு சுகாதார வழிகாட்டகல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் முகக்ககவசம் அணியாது பேருந்துகளில் பயணிப்பவர்கள், பொது இடங்களில் நடமாடுபவர்கள், ஆகியோருக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது .