Home Archive by category

ஆர்டெமிஸ் -1 : நாசாவின் நிலவுப் பயணம் மீண்டும் தோல்வி

 சந்திரனுக்கான நாசாவின் புதிய ஆர்டெமிஸ் -1 உந்து கணையை செலுத்தும் நடவடிக்கை, நீண்ட தாமதத்தின் பின்னர் இரண்டாவது தடவையாகவும் பிற்போடப்பட்டுள்ளது.

குறித்த உந்துகணையை செலுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சி இரண்டாவது தடவையாகவும் தோல்வி அடைந்துள்ளதாக நாசாவின் கட்டுப்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

சந்திரனுக்கான விண்கலத்தை சுமந்து செல்லும் உந்துகணையில் ஏற்பட்ட எரிபொருள் கசிவை நிறுத்த முடியவில்லை என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் உந்துகணையில் உள்ள பழுதுகள் தொடர்பில் பொறியிலாளர்கள் ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஏவுதளத்தில் வைத்து செய்ய முடியாத பழுதுகள் கண்டறியப்பட்டால் அதனை சரி செய்ய வேண்டிய தேவை ஏற்படும் பட்சத்தில் உந்துகணையை ஏவும் செயற்பாடு பல வாரங்கள் தாமதப்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் உந்துகணையை செலுத்தும் மூன்றாவது முயற்சி, ஒக்டோபர் மாதம் நடுப்பகுதிக்கு முன்னர் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரனுக்கு விண்கலத்தை செலுத்துவதற்கென நாசாவினால் மிகவும் சக்திவாய்ந்த உந்துகணை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

50 ஆண்டுகளுக்கு பின்னர் சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் முயற்சியாக இந்தப் பரீட்சாத்த முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.

Related Posts