Home Archive by category

நீருக்கு அடியிலிருந்து தென்பட்ட பழைமை வாய்ந்த தேவாலயம்

ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியால் நீர்த்தேக்கங்களில் மறைந்திருந்த சின்னங்கள் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

நகரங்களுக்கும் விவசாயத்திற்கும் தண்ணீர் வழங்கும் நீர்த்தேக்கங்களில் சுமார் 36 விழுக்காடு தண்ணீர் மட்டுமே எஞ்சியுள்ளது.

கேட்டலோனியா (Catalonia) பகுதியில் மூழ்கியிருந்த 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாலயம் ஒன்று இப்போது முழுமையாகத் தெரிகிறது.

அதைக் காண மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 1960ஆம் ஆண்டு அங்கு அணைக்கட்டு ஒன்று கட்டப்பட்டபோது அந்தத் தேவாலயத்தோடு சான்ட் ரோமா டி சாவ் (Sant Roma de Sau) என்ற ஊரும் தண்ணீரில் மூழ்கின.

இதன்போது வழக்கமாக அந்தத் தேவாலயத்தின் மணிக்கூண்டை மட்டுமே காண முடியும்.

Related Posts