அமைச்சரவையில் சிறு மாற்றத்தை செய்த கனேடிய பிரதமர்

கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அமைச்சரவையில் சிறு மாற்றத்தை செய்துள்ளார்.
இரண்டு அமைச்சர்கள் தாங்கள் வகித்த பதவிகளை மாற்றிக் கொண்டதே இந்த அமைச்சரவை மாற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரூடோ அரசாங்கத்தில் கொள்முதல் அமைச்சராக கடமையாற்றி வந்த பிளேலாமினா டாஸீ, தென் ஒன்றாரியோவிற்கான பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.
இதுவரை காலமும் குறித்த அமைச்சுப் பதவியை வகித்து வந்த ஹெலினா ஜாசீக் கொள்முதல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பதவி மாற்றமானது டாஸீ தனது ஒன்றாரியோவில் கூடுதல் நேரத்தை கழிக்கக் கூடிய வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குடும்ப சுகாதாரப் பிரச்சினைகளினால் இவ்வாறு பதவி மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
றொரன்டோ பெரும்பாக தொகுதியை பிரதிநிதித்துவம் செய்யும் ஜாசீக் 2021ம் ஆண்டில் முதல் முறையாக அமைச்சராக நியமிக்கப்பட்டார்.