வீட்டின் வடகிழக்கு மூலையில் இதை செய்து பாருங்கள்; பண மழையும் தங்க மழையும் பொழியும்
பொன் பொருள் பணம் இவை அனைத்தும் ஒருவருடைய வாழ்க்கையில் நிறைவாக இருக்க வேண்டும் என்றால் அந்த இறைவனின் ஆசீர்வாதம் நிச்சயம் தேவை. குறிப்பாக வீட்டில் தங்கம் சேர வேண்டும் என்றால், அந்த ஸ்வர்ண பைரவரின் ஆசிர்வாதத்தை முதலில் பெற்று இருக்க வேண்டும். கூடவே மகாலட்சுமி அருள் கடாட்சம் இருந்தால்தான் வீட்டில் சுவர்ணம் நிலையாக தங்கும்.
சொர்ணம் வாங்கக் கூடிய யோகத்தையும், ஐஸ்வர்ய கடாட்சத்தையும் ஒரு சேர பெற நம்முடைய வீட்டில் என்ன பரிகார விளக்கு ஏற்றுவது என்பதை பற்றிய ஒரு குறிப்பை தான் இந்த பதிவில் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
இந்த பரிகாரத்தை செய்ய உங்களுடைய வீட்டின் ஈசானிய மூலையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஈசானிய மூலை என்றால் வீட்டின் வடகிழக்கு பகுதி. வீட்டின் வடகிழக்கு மூலையை முதலில் துடைத்து சுத்தம் செய்துவிட்டு அரிசி மாவால் கோலம் போட்டுக்கொள்ள வேண்டும். அந்த கோலத்திற்கு மேலே ஒரு மண் அகல் விளக்கை வைத்து, விளக்கிற்கு உள்பக்கத்தில் வாசனை மிகுந்த புனுகு தடவி அதன் பின்பு, இலுப்பெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.
வடகிழக்கு மூலையில் இந்த தீபம் வைத்து ஏற்றப்பட வேண்டும். இந்த தீபச்சுடர் வடகிழக்கு மூலையை நோக்கியவாறு இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு நீங்களும் வடகிழக்கு மூலையில் அமர்ந்து உங்களுக்கு தேவையான வரங்களை ஸ்வர்ண பைரவரிடம் கேளுங்கள். வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க இந்த பரிகாரம் உங்களுக்கு கை மேல் பலனை கொடுக்கும். திருமணத்திற்கு கூட தங்கம் வாங்க முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள், இந்த பரிகாரத்தை உண்மையான நம்பிக்கையோடு செய்தால் சீக்கிரமே தங்கம் வாங்கும் யோகம் கைக்கூடி வரும்.
வாரத்தில் ஏதாவது ஒரு நாள் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை, எந்த கிழமையில் வேண்டும் என்றாலும் இந்த தீப வழிபாட்டினை உங்களுடைய வீட்டில் மேற்கொள்ளலாம். காலை நேரம், மாலை நேரம் இதில் எந்த நேரம் உங்களுக்கு சௌகரியமாக இருக்கிறதோ அந்த நேரத்தில் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். வழிபாட்டிற்கு புனுகு மிக மிக அவசியம் தேவை. -
இது தவிர உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய மகாலட்சுமியின் திரு உருவப்படத்துடன் ஸ்வர்ண பைரவர், ஐஸ்வரேஸ்வரர் படம் இவைகளையும் வைத்து வழிபாடு செய்வது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். ஐஸ்வர்யாத்தை கொடுக்கக்கூடிய இந்த சுவாமிகளின் திருவுருவப்படத்திற்கு வெள்ளிக்கிழமை தோறும் வாசனை மிகுந்த மல்லிகை பூக்களால் அலங்காரம் செய்து பசும்பாலினால் செய்யப்பட்ட பாயாசத்தை வைத்து வழிபாடு செய்வது வீட்டிற்கு மிகவும் நல்லது. வறுமையை நீக்க இந்த வழிபாடு கை மேல் பலனை கொடுக்கும்.
பொன் பொருள் பணம் காசு விலை உயர்ந்த பொருட்கள் இவைகளை மேலும் மேலும் சேர்க்க வேண்டும் என்றால் அதற்கான வருமானத்தை முதலில் நாம் தேடிக்கொள்ள வேண்டும். விடாமுயற்சி இருக்கும்போது, பணம் பல வழிகளில் உங்கள் கையை வந்து சேரும். நேர்மையான முறையில் உண்மையாக இருந்து வாழ்க்கையை வழிநடத்திச் சென்று, நம்பிக்கையுடன் மேல் சொன்ன பரிகாரங்களை செய்யும் போது நிச்சயமாக பரிகாரங்கள் பல மடங்கு பலனை சீக்கிரத்தில் கொடுக்கும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.