Home Archive by category

உக்ரைனை தொடர்ந்து மற்றொரு நாட்டுக்கு ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா

சீனா, தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று சொந்தம் கொண்டாடி வருகிறது.

இந்த விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகின்றது.

அண்மையில் அமெரிக்க சபாநாயகர் தைவானுக்கு சென்றதால் ஆத்திரம் அடைந்த சீனா, தைவானை சுற்றி போர்ப் பயிற்சியில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

மேலும் சீன போர் விமானங்கள், தைவான் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வருகின்றன என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தைவானுக்கு ராணுவ ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

ரூ.8,700 கோடி மதிப்பில் ஆயுதங்களை தைவானுக்கு விற்பனை செய்ய ஒப்புதல் வழங்க அமெரிக்க நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) வலியுறுத்தியுள்ளார்.

தைவானுக்கு 60 கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், 100 ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்க அதிபர் ஜோபைடன் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Related Posts