Home Archive by category

வேருண்டை சமரச இல்லம் புதிய பண்பாட்டுத் தளத்தில்...

பல நூற்றாண்டு காலமாக இருளில்  மூழ்கியிருந்த யாழ்  வடமரா ட்சி கரவெட்டிப் பகுதியில் அமைந்துள்ள வேரோண்டை மயானம் (சமரச இல்லம்)  இன்று  இலங்கையில் உள்ள மயானங்களில் மிகவும் புனிதமான இடமாக மாறிவரும் இந்தக் காலத்தில் கரவெட்டி ஞானாசாரியர் கல்லூரி  வீதி தெடக்கம் ஏறக்குறைய ஆயிரம் மீட்டருக்கும் அதிகமான தூரம்  (சமரச இல்லம் வரை) மின்கம்பங்கள் நாட்டப்பட்டு,மயானத்தின் அகமும் புறமுமாக மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வேரோண்டை  மயானம் மின் ஒளியின் பிரகாசத்தில் மிளிர்துள்ளது என்றால் மிகையாகா…

“குறித்த திட்டம் நிறைவேற்றுவதில் வழமைபோல் பல தடங்கல்கள் கால நீடிப்புகள் மத்தியில்”அந்தப்பகுதியில் நடந்தேறிவந்த சமூக சீர்கேடுகளும் பெரும்பாலும் இல்லாது ஒழிந்து போயுள்ளன. இதற்கு மிகவும் பக்க பலமாக  உழைத்தவர்களில் ஒருவரான
டென்மார்க்கில் வதியும் ஈழத்தமிழரும் சமூக, டென்மார்க் அரசியல் செயற்பாட்டாளரும் சமரச இல்லம் அமைப்பின் ஐரோப்பிய ஒன்றிய கிளையின் ஆலோசகருமான எழுத்தாளர் கரவையூர் டென்மார்க் தருமன் தர்மகுலசிங்கம், அகில இலங்கை மின்சார சபையின் இன்றைய துணை தலைவர் மரியாதைகுரிய திரு. பிரியந்த குணதிலக அவர்களிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கமைய மேற்படி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு தற்சமயம் மின்சார விநியோகம் வழங்கப்பட்டிருக்கிறது.


இது தொடர்பில் சமரச இல்லத்தின் ஐரோப்பிய ஒன்றிய கிளையின் ஆலோசகர் தருமன் தர்மகுலசிங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

விஞ்ஞான உலகம் பல வழிகளில் முன்னேறியிருக்கும் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் இலங்கையின் வடமாகாணத்தின் பல மயானங்கள் மின்சாரம் இன்றி இருளாக இருப்பது என்பது வேதனைக்குரிய விடயமாகும்.குறிப்பாக எங்களுடைய மூதாதையர்கள் மீளாத்துயில் கொள்ளும் இடமாக இருக்கும் மயானங்கள் இருளுடன் காணப்படுவது என்பது அனைவருக்கும் வேதனை தரக்கூடியதொன்றாகும்.அதன் அடிப்படையில் கரவெட்டியில் இயங்கிவரும் வேரோண்டை மயான முகாமைத்துவ சபையும் ஐரோப்பிய ஒன்றிய வேரோண்டை சமரச இல்லத்தினரதும் முயற்சியின் பயனாக தற்சமயம் வடமராட்சி கரவெட்டி ஞானாச்சாரியார் பாடசாலையிலிருந்து வேரோண்டை மயானம் ( சமரச இல்லம்) வரையிலான சுமார் ஆயிரம் மீட்டருக்கும் அதிகமான தூரம் வரை மின்கம்பங்கள் நடப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டிருக்கிறது.  

ஆண்டாண்டு காலமாக இருளில் மூழ்கிக் கிடந்த வேரோண்டை பகுதிக்கு வரலாற்றில் முதல் தடவையாக மின்சார இணைப்பு வழங்கப்பட்டிருப்பது ஒரு வரலாற்று நிகழ்வாகும். இது ஒரு மைல்கல்,அத்துடன் வேரோண்டை சமரச இல்ல பகுதியை ஒரு புனித கோவிலாக மாற்ற வேண்டும் என்ற உறுதியோடு பயணித்த சமரச இல்லத்தின்  நிர்வாகத்தினருக்கு இந்த நிகழ்வு பெரும் உற்சாகத்தை வழங்கியிருப்பதுடன்,எதிர்காலத்தில் அவர்களுடைய நல திட்டங்கள் வெற்றியளிக்கும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.அத்துடன்,எங்களுடைய மூதாதையர்கள் மீழாத்துயில் கொள்ளும் வேரோண்டை மயானத்துக்கு ஒளி கிடைத்திருப்பது அப்பிரதேச மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும் ஆத்ம திருப்தியையும் கொடுத்திருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

மேலும் இந்த சமரச இல்லம் புதிய பொலிவோடு -புதிய பண்பாட்டுத் தளத்தை நோக்கி பயணிக்கவிருக்கிறது. இந்த மின்சார இணைப்பின் மூலம் கரவெட்டி ஞானாசாரியார் கல்லூரியிலிருந்து சமரச இல்ல பகுதி வரைக்கும் வீதி மின் விளக்குகள் தொடர்ந்து ஒளிர விடப்பட்டுள்துடன், சமரச இல்ல பகுதிக்குள்ளும் மின்சார விளக்குக்கள் ஒளிர விடப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கின்றேன்.   அத்துடன் சமரச இல்லப்பகுதியில் “சமூக சீர்கேடுகளை தவிர்க்க” கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இறுதி நிகழ்வுகளின் போதும் மற்றும் மரக்கன்றுகள் ,  பூக்கன்றுகளுக்குரிய தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்வதும் இலகுவாக்கப்பட்டுள்ளதுடன்,
தண்ணீர் தாங்கியும் நிறுவப்பட்டுள்ளது.மின்சார எரியூட்டி அமைப்பதற்கான சந்தர்ப்பமும் ஏற்பட்டிருக்கிறது. அதாவது,வேரோண்டை சமரச இல்ல பகுதியை ஒரு புனித கோவிலாக மாற்ற வேண்டும் என்ற உறுதியான புனித  பயணம் நம்பிக்கையுடனும் விறுவிறுப்பாகவும் நடைபெறவிருக்கிறது என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வேலைத்திட்டங்கள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த வரலாற்று நிகழ்வுக்காக உழைத்தவர்கள் என்றும் மக்களால் போற்றப்படவேண்டியவர்கள்.குறிப்பாக கரவெட்டி வேரோண்டை மயான  (சமரச இல்ல) முகாமைத்துவ சபை,தலைவர் சட்டத்தரணி திரு க. மகிந்தன், துணைத் தலைவர் திரு. செல்வராசா புனிதராஐ், பொருளாளர் திருமதி. கு. வனிதா, நிர்வாக உறுப்பினர் திரு. பொ. ஶ்ரீபவன், விநாயகமூர்த்தி திலீபன், பிரதேச செயலாளர்,மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சமரச இல்லத்தின் இயக்குனர்களான பிரித்தானியா வாழ் திரு. புஸ்பலிங்கம் காண்டிபன்,  திரு சங்கரப்பிள்ளை வசந்தகுமார், திரு. வைரமுத்து சிறீதரன்,  திரு தம்பிஐயா.அருள்நந்தி , திரு.  தவயோகம்  குகதாசன் ,திரு. விநாயகமூர்த்தி  திலீபன்,திரு. சூரிப்பிள்ளை பாலசிங்கம்,   France வாழ்  திரு. புலேந்திரன்-ஜெமில், திரு தங்கமணி புஸ்பாகரன், திரு சங்கரப்பிள்ளை நவரத்தினம் டென்மார்க் வாழ்  திரு. ராசு கலைச்செல்வம்,  கனடா வாழ் திரு வேலுப்பிள்ளை விவேகானந்தன் மற்றும் வேரோண்டை சமரச இல்ல உறுப்பினர்களுக்கும் சமரச இல்ல நிர்வாகத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறன். இதனூடாக அனைத்து கிராமங்களுக்கிடையிலான சமூக ஒருமைப்பாடு மென் மேலும் வளர்த்தெடுக்க இந்த புனித பயணம் வழி சமைக்கும் என்பது சத்தியமே!!

Related Posts