இரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பு
புழுதி படியத்தொடங்கியதும் அச்சநிலை மேலெழுந்தது.
மராகெச்சின் பழைய நகரில் பூகம்பத்தினால் ஏற்பட்டுள்ள காயங்கள் உயிரிழப்புகள் பாதிப்புகள் தெரியவரத்தொடங்கியதும் கதறல்கள் ஆரம்பமாகின.
சில நிமிடங்களிற்கு முன்னரே மொராக்கோவின் அந்த நகரம்பாரிய பூகம்பம்தாக்கியிருந்தது.
எப்போதும் மக்கள் நிரம்பிவழியும் ஜெம்மா எல்னா சதுக்கத்தில் திரண்டிருந்த வெள்ளிக்கிழமை மாலை இந்த பூகம்பம் தாக்கியது.
ஏனைய பலர் நிலம் மிகவேகமாக அதிரத்தொடங்கியவேளை உறக்கத்திலிருந்தனர்.
பூகம்பம் காரணமாக கட்டிடங்கள் தரைமட்டமானதில் ஆயிரத்திற்கும்அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
என்ன நடக்கின்றது என்பதைதங்களால் ஆரம்பத்தில் உணரமுடியவில்லை என சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ள சிலர் தொடர்ந்து ஏற்பட்ட சிறிய அதிர்வுகள் காரணமாகவும் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததன் காரணமாகவும் பி;ன்னர் என்ன நடக்கின்றது என்பதை தங்களால் உணரமுடிந்தது எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த இயற்கை அனர்த்தத்தின் அளவு தெரியதொடங்கியதும் பலர் தங்கள் வீடுகளில்இருந்து வெளியே வந்து உயர்ந்த கட்டிடங்கள் மின்சாரகோபுரங்கள் இல்லாத திறந்த வெளிகளை நோக்கி நகரத்தொடங்கினர்.
தரைமட்டமான வீடுகளில்இருந்து படுகாயமடைந்தவர்கள் ஸ்டிரெச்சர்களில் கொண்டு செல்லப்பட்டனர்.
சில இடங்களில் அவர்களின் கதறல்கள் புறக்கணிக்கப்பட்டன - அம்புலன்ஸ் பணியாளர்கள் ஒரு முதிய பெண்ணின் அலறலை புறக்கணித்தனர்.
தங்களை சுற்றி காணப்படும் காட்சிகளால் கடும் குழப்பத்தில்காணப்பட்ட அம்புலன்ஸ் பணியாளர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்வதற்கான போதிய இடம் அம்புலன்சில் இல்லை என்தெரிவித்தனர்.
பூகம்பத்திலிருந்து உயிர்தப்பிய பலர் அதிகாலை வரை வீதிகளில் தங்கியிருந்தனர்.
வீடுகள் அழிக்கப்பட்டதாலும் மற்றுமொரு பூகம்பம் குறித்த வதந்திகளாலும் மக்கள்வீதிகளிலேயே பொழுதை கழிக்க தீர்மானித்ததால் தற்காலிக கட்டில்கள் உருவாக்கப்பட்டன.
இரண்டாவது நாள் காலையிலும் பலர் அங்கு காணப்பட்டனர்.
நகரின் பூங்காக்கள் பிளாசாக்கள் வாகனதரிப்பிடங்கள் சோகமான அவசர முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன.
ஏனையவர்கள் நகரிலிருந்து வெளியேற தீர்மனித்தனர் குடும்பங்கள் வளர்ப்பு பிராணிகளுடன் கார்கள் மோட்டார் சைக்கிள்கள் ஏன் குதிரை வண்டிகளில் கூட வெளியேறிக்கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் மொராக்கோவின் கரையோர நகரங்களான ரபாட் அல்லது கசபலன்சாவிற்கு செல்ல தீர்மானித்துள்ளனர்.
அவர்கள் மிகமோசமாக சேதமடைந்துள்ள வரலாற்று நகரத்தை விட்டு செல்கின்றனர்.
சுற்றுலாப்பயணிகள் அதிகம் செல்லும் மராக்கேச்சின் மெதினாவும்நகர சுவர்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
பூகம்ப அதிர்வை நூற்றாண்டுகால கட்டிடங்களால் தாங்க முடியவில்லை.