உலக நாடுகளை தாக்க கூடிய ஆபத்து

பருவகால மாற்ற விளைவால் 2,100-ம் ஆண்டில் வெப்பம் 3 மடங்கு அதிகரித்து உலக நாடுகளை தாக்க கூடிய ஆபத்துள்ளது என ஆய்வு ஒன்று எச்சரிக்கை தெரிவிக்கின்றது.
சமீபத்தில் ஸ்பெயின், போர்ச்சுகல் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரித்தானியா, சீனா ஆகிய நாடுகளில் வெப்ப நிலை அதிகரித்து பொதுமக்களை அவதிப்பட செய்தது.
இதன் ஒரு பகுதியாக வெப்ப அலையும் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளில் மட்டுமே மொத்தம் ஆயிரக்கணக்கானோர் வெப்ப அலைக்கு இரையாகினர்.
இந்த நிலையில், ஒரு புதிய ஆய்வு தகவலின்படி, பருவகால மாற்ற விளைவால் வருங்காலத்தில் வெப்பம் 3 மடங்கு அதிகரித்து உலக நாடுகளை தாக்க கூடிய ஆபத்துள்ளது என தெரியவந்துள்ளது.
இதன்படி, 2,100-ம் ஆண்டில் அமெரிக்காவின் தென்கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் கோடை காலங்களில் பெருமளவு வெப்ப குறியீடு கடுமையாக இருக்கும். பூமியின் வளம் நிறைந்த அட்ச ரேகை பகுதிகளில், வெப்பம் மற்றும் ஈரப்பதம் அதிகரித்து கொண்டே வருகிறது.
இதனால் 103 டிகிரி அல்லது அதற்கும் கூடுதலான வெப்ப அளவு பதிவாகிறது.
கோடையில் தற்போது இதுபோன்று சில சமயங்களில் ஏற்படும் இந்த நிகழ்வானது, இந்நூற்றாண்டின் மத்தியில், ஆண்டுக்கு 20 முதல் 50 மடங்கு என்ற எண்ணிக்கையில் அதிகரிக்க கூடும் என ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.