அரசாங்க எம்பிக்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பு இரத்து

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளைய தினம் நடைபெறவிருந்த அரசாங்கக் குழு உறுப்பினர்களின் கூட்டத்தை இரத்துச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னர் இந்த சந்திப்பு இன்று மாலை 5 மணிக்கு நிதியமைச்சில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஜனாதிபதி மற்றும் அவைத்தலைவர் சுசில் பிரேமஜயந்திற்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்தச் சந்திப்பு தொடர்பில் பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படாத நிலையில் இந்தக் கூட்டத்தைப் புறக்கணிக்க உறுப்பினர்கள் குழுவொன்று தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.