இயக்குனர் மாரி செல்வராஜ் ஒரு சைக்கோ! பெண்களை தாக்குவார்: பிரபல நகைச்சுவை நடிகர்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் மாரி செல்வராஜ்.
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற திரைப்படங்களை அவர் இயக்கியுள்ளார்.
சாதி வெறியை தூண்டுவது போன்ற படங்களை மாரி செல்வராஜ் எடுக்கிறார் என்ற விமர்சனம் அவர் மீது வைக்கப்படுவது உண்டு.
அவர் குறித்து பேசிய பிரபல நகைச்சுவை நடிகர் டெலிபோன் ராஜ், “சாதி வெறியை தூண்டி படம் எடுப்பது மிகவும் கேவலமான செயல். இன்றைய இளைஞர்களுக்கு சாதி என்றால் என்னவென்று தெரியவில்லை. மாமன்னன் படத்தை பார்த்து பல இளைஞர்கள் சாதி என்றால் என்ன என்று கேட்கிறார்கள்.
மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் போன்றவர்கள் இன்று சாதியை உயர்த்தி படம் எடுக்கிறார்கள்.
மாரி செல்வராஜ் ஒரு சைக்கோ, இதை உதயநிதியே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார், 'அவன் ஒரு சைக்கோ சார்.. எல்லாரையும் அடிப்பான்..' என்று பல நடிகர்களை செட்டில் அடித்து விடுகிறார்.
இப்படி ஒருவரை அடிக்க முடியுமா? கர்ணன் படத்தில் போலீஸ் அடிக்கும் காட்சியில் நிஜமாகவே ஒரு நடிகை அப்படி அடிக்கப்பட்டு இருகிறார்.
சாதி வெறியைத் தூண்டும் படங்களை எடுக்கக் கூடாது என்று சட்டம் இயற்ற வேண்டும், இப்படிப்பட்ட படங்களை எடுக்க இயக்குநர் சங்கம் அனுமதிக்கக் கூடாது” என காட்டமாக பேசியுள்ளார்.