Home Archive by category

மூதூரில் இனப்படுகொலை செய்யப்பட்ட 17 தமிழர்களுக்கு பிரான்ஸில் நினைவேந்தல்

மூதூரில் இனப்படுகொலை செய்யப்பட்ட 17 தமிழர்களை நினைவுகூறும் நிகழ்வு பிரான்ஸில் இடம்பெற்றது.

2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி மூதூரில் நடந்த படுகொலைச் சம்பவத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான அக்ஷன் பாம் நிறுவனத்தில் பணியாற்றிய 17 பேர் படுகொலை செய்யப்பட்டு 17 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

இதனையடுத்து, உயிர் நீத்த பணியாளர்களை நினைவுகூரும் நிகழ்வு பிரான்ஸ் கிளிச்சி பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று பிரான்ஸ், கிளிச்சி பகுதியில் அமைந்துள்ள உயிர் நீத்த பணியாளர்களின் நினைவுத்தூபிக்கு முன்னால் இடம்பெற்றது.

“2006ஆம் ஆண்டு ஜூலை 31 அன்று மூதூரில் உள்ள அக்ஷன் பாம் அலுவலகத்திற்கு சென்ற குறித்த 17 பணியாளர்களும் யுத்த சூழ்நிலையின் காரணமாக அலுவலகத்தை விட்டு வெளியேற முடியாத நிலையில் அங்கேயே தங்கியிருந்தனர்.

இந்நிலையில்,ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதியன்று குறித்த 17 பணியாளர்களும் அலுவலகத்திலேயே இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

17 வருடங்கள் கடந்த பின்பும் தங்களுடைய உறவுகளுக்கான நீதி இதுவரையில் கிடைக்கவில்லை என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அங்கலாய்த்து வருகின்றனர்.

Related Posts