‘யாழ் நிலா’ ரயில் சேவை இன்று முதல் ஆரம்பம்
கல்கிசையிலிருந்து-காங்கேசன்துறை வரையில் சேவையில் ஈடுப்படவுள்ள ‘யாழ்நிலா’ சுற்றுலா பயணிகள் சேவை இன்று முதல் தனது பயணத்தை ஆரம்பிக்கிறது.
வார இறுதி நாட்களில் இயக்கப்படும் ‘யாழ்நிலா’ரயில் சேவை வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு கல்கிசை நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்து மறுநாள் காலை 5.30 மணிக்கு காங்கேசன் துறையை சென்றடையும்.
பின்னர், ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து புறப்படும், மறுநாள் காலை 5:20 மணிக்கு கொழும்பை வந்தடையவுள்ளது.
இந்த ரயில் சேவையில் பயணிக்க ஆசனங்களை முன்பதிவு செய்யவேண்டும் என்பதோடு, பயணிகளிடம் முதல் வகுப்புக்கு 4 ஆயிரம் ரூபாவும், இரண்டாம் வகுப்புக்கு 3 ஆயிரம் ரூபாவும், மூன்றாம் வகுப்புக்கு 2 ஆயிரம் ரூபாவும் அறவிடப்படுகின்றது.
இதேவேளை, நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு இம்மாதம் 18ஆம் திகதி முதல் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான ரயில் பயணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.