ஆண் துணை இல்லாமல் பெண்கள் காரில் செல்ல தடை விதித்த தலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அங்குள்ள பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் பெண்கள் வெளியில் காரில் செல்லும் போது ஆண் துணை இல்லாமல் செல்லக்கூடாது என்றும் கட்டாயம் பர்தா அணிந்திருக்க வேண்டும் என்று தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.
பெண்கள் தாங்களாகவே வாகனம் ஓட்டுவதை மற்றும் வாகனங்களில் தனியாக பயணம் செய்வதை தடுக்கும் விதியை கடுமையாக அமுல்படுத்தும் வகையில் இவ்வாறு தாலிபான்கள் உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
இந்த உத்தரவையடுத்து ஆப்கான் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்கனவே ஆப்கானிஸ்தானில், காபூல் உள்ளிட்ட மாகாணங்களில் பெண்கள் அழகு நிலையங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டது.இதனால் பெண் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வரும் சூழல் உருவானது.
மாணவிகள் கல்வி கற்கவும் தடைவிதிக்கப்பட்டது. உடற்பயிற்சி கூடங்கள், பூங்காக்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லவும் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.