Home Archive by category

டொனால்ட் டிரம்பிற்கு எதிராக நீதிமன்றத்தில் மீண்டும் குற்றச்சாட்டுகள் பதிவு

2020 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முற்பட்டார் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டிரம்ப் அமெரிக்காவின் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோபைடனின் வெற்றியை காங்கிரஸ் சான்றழிப்பதை தடுக்க முயன்றார் என 45 பக்க குற்றச்சாட்டுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், இதன் மூலம் அமெரிக்காவை ஏமாற்றி அமெரிக்க மக்களின் நியாயமான தேர்தலுக்கான உரிமையை பறிக்க முயன்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக டொனால்ட் டிரம்பினை வியாழக்கிழமை நியுயோர்க்கில் உள்ள சமஸ்டி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அண்மையில் டொனால்ட் ட்ரம்ப் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளி என நீதிமன்றம் உறுதிபடுத்தியிருந்தது.

இந்நிலையிலேயே அவர் மீண்டும் குற்றவாளியாக நீதிமன்றுக்கு அழைக்கபட்டடுள்ளார்.

மேலும், கடந்த 1996ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஈ ஜெலான் கெரோல் என்பவரால் வழக்குதாக்கல் செய்யப்பட்டது. இதனடிப்படையிலேயே தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இழப்பீடாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 3 மில்லியன் டொலர் அளிக்கவும் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts