Home Archive by category

சிங்கப்பூரிடம் சரிந்தது ஆசிய சம்பியன் இலங்கை : கடைசிக் கட்டத்தில் இலங்கை இழைத்த தவறு சிங்கப்பூருக்கு சாதகமாகியது

உலகக் கிண்ண வலைபந்தாட்ட தரவரிசையில் கடைநிலை அணிகளான இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில்  தென் ஆபிரிக்காவின் கேப் டவுன் இன்டர்நெஷனல் கொன்வென்ஷன் அரங்கில் திங்கட்கிழமை (31) நடைபெற்ற நிரல்படுத்தல் போட்டியில் சிங்கப்பூர் 55 - 52 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் அதி உயரமான வீராங்கனை தர்ஜினி சிவலிங்கத்தைக் கொண்டிருந்த ஆசிய சம்பியன் இலங்கைக்கு இந்தத் தோல்வி கடந்த 4 வருடங்களில் கிடைத்த மிகவும் மோசமான தோல்வியாகும்.

இலங்கை வீராங்கனைகளைவிட சிங்கப்பூர் வீராங்கனைகள் உயரத்தில் குறைவாக இருந்தபோதிலும் வேகமும் விவேகமுமான குறுந்தூர பந்து பரிமாற்றங்களுடன் விளையாடி முதலாவது ஆட்ட நேர பகுதியில் 19 - 10 என முன்னிலை அடைந்தது. கோல்கள் போடுவதிலும் இலங்கையை விட சிங்கப்பூர் திறமையை வெளிப்படுத்தியது.

இரண்டாவது ஆட்ட நேர பகுதியில் தர்ஜினி சிவலிங்கத்திற்கு பதிலாக கோல் ஷூட்டராக திசலா அல்கம களம் இறக்கப்பட்டதும் ஆட்டத்தில் திருப்பம் ஏற்பட்டது. இரண்டாவது பகுதியை 17 - 7 என்ற கோல்கள் கணக்கில் தனதாக்கிய இலங்கை இடைவேளையின்போது 27 - 26 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

ஆனால் இடைவேளையின் பின்னர் இலங்கை வீராங்கனைகள் இழைத்த தவறுகளைப் பயன்படுத்திக்கொண்ட சிங்கப்பூர் ஆட்டத்தின் 3ஆவது பகுதியை 16 - 13 என தனதாக்கியது. மூன்றாவது ஆட்ட நேர  பகுதி  முடிவில் 42 - 40 என்ற கோல்கள் கணக்கில் சிங்கப்பூர் முன்னிலையில் இருந்தது. ஆனால் வித்தியாசம் 2 கோல்களாக இருந்ததால் எதுவும் நிகழலாம் என்ற நிலை தோன்றியது.

எவ்வாறாயினும் நான்காவது ஆட்ட நேரப் பகுதியில் 2 நிமிடங்கள் மாத்திரமே இருந்தபோது மத்திய வலயத்திலிருந்து இலங்கையின் பந்து பரிமாற்றம் தவறாக இடம்பெற்றதால் அப் பகுதியை சிங்கப்பூர் 13 - 12 என்ற கோல்கள் கணக்கில் தனதாக்கி ஒட் டு  மொத்த நிலையில் 55 - 52 என்ற கோல்கள் கணக்கில் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது.

இந்தப் போட்டிக்குப் பின்னர் எஞ்சிய போட்டிகளில் தர்ஜினி சிவலிங்கம் விளையாடமலேயே ஓய்வு பெறுவார் என எதிர்பர்க்கப்படுகிறது.

Related Posts