Home Archive by category

ஓய்வை அறிவித்தார் ஸ்டூவர்ட் பிராட்

ஓவல் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

இதன்படி, ஓவல் டெஸ்ட் தனது இறுதிப் போட்டியாக இருக்கும் என ஸ்டூவர்ட் பிராட் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்குப் பிறகு இரண்டாவது வெற்றிகரமான பந்துவீச்சாளராக ஸ்டூவர்ட் பிராட் விடைபெறுகின்றார்.

பிராட் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்

"நாளை அல்லது திங்கட்கிழமை எனது கடைசி கிரிக்கெட் ஆட்டமாக இருக்கும்" என்று பிராட் மூன்றாம் நாள் ஆட்டத்தின் முடிவில் தெரிவித்துள்ளார்.

"இது ஒரு அற்புதமான பயணம், நாட்டிங்ஹாம்ஷயர் மற்றும் இங்கிலாந்து Badge அணிந்திருப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்.

"நான் எப்போதும் போல் கிரிக்கெட்டை நேசிக்கிறேன், இது ஒரு அற்புதமான தொடராக இருந்தது, நான் எப்போதும் முதலிடத்தில் முடிக்க விரும்புகிறேன்.

"இந்தத் தொடரின் ஒரு பகுதியாக இருப்பது மிகவும் அருமையாகவும் பொழுதுபோக்காகவும் இருந்தது போல் உணர்கிறேன்." என ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.

167 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டூவர்ட் பிராட் 3,654 ஓட்டங்களையும் 602 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

2010 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற இருபதுக்கு இருபது உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.

மூன்றாம் நாள் என்ன நடந்தது?

ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தின் உதவியுடன் ஓவலில் மூன்றாம் நாளில் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

நான்காவது நாள் ஆட்டம் நாளை தொடரவுள்ள நிலையில், அவுஸ்திரேலியா அணி வெற்றபெற மிகப் பெரிய ஓட்ட இலக்கை துரத்திய அடிக்க வேண்டியிருக்கும்.

முதல் இன்னிங்க்ஸ் முடிவில் அவுஸ்திரேலியா அணி 12 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருந்தது. எனினும், மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 389 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணிவசம் தற்போது ஒரு விக்கெட் உள்ளது. தற்போது இங்கிலாந்து அணி 377 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் களத்தில் இருக்கின்றனர்.

இந்நிலையில், 400 ஓட்டங்களுக்கு மேல் அவுஸ்திரேலியா அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் தொடரை 2-2 என்ற அடிப்படையில் சமநிலைப்படுத்த முடியும்.

அத்துடன், 22 ஆண்டுகளாக ஆஷஸ் தொடரில் சொந்த மண்ணில் தோற்கடிக்கப்படாத அணி என்ற சாதனையையும் இங்கிலாந்து தக்கவைத்துக்கொள்ளும்.

Related Posts