சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு- துபாய் செல்லும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்ல இருந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இன்று காலை 7.20 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் தாமதம் ஏற்பட்டுள்ளது.
விமானத்தில் சுமார் 160 பயணிகள் இருந்த நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.